கொவிட் தொற்றின் வீரியம் குறித்து பேராசிரியர் சந்திம ஜீவந்தர கருத்து!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் வீரியமிக்க காலகட்டம் நிறைவடைந்து வருவதாக ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
அமெரிக்க ஆய்வொன்றின் அறிக்கையை மேற்கோள்காட்டி கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றின் மோசமான நிலைமை நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன் ஊடாகவே கொரோனா பரவலை நிறைவுக்கு கொண்டுவர முடியுமெனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது அனைவரினதும் கடமையாகும், எனவே தனிப்பட்ட ரீதியாக ஒவ்வொருவரும் சிந்தித்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகுமெனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews