கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் புதிய சாதனை!

கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று உயர்ந்த மதிப்பைப்பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,339.28 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
முன்னதாக 2021 ​செம்டம்பர் மாதம் 02 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த நிலையில் இதன்போது 9,335.98 புள்ளிகளாக அனைத்து பங்கு விலைச்சுட்டெண் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய மொத்த புரள்வு 6.66 பில்லியன் ரூபாவாக பதிவாகி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews