குளவிக் கொட்டில் நான்கு பிள்ளைகளின் தாய் மரணம்.

முந்தளம், ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்களில், இன்று (29) இடம்பெற்ற இரு குளவிக் கொட்டுக்கு சம்பவங்களில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளதுடன் 15 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முந்தளம் கந்ததோடுவாவ கிராமத்தில் குளவிக் கொட்டுக்குள்ளான நான்கு பிள்ளைகளின் தாயொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது மரணமடைந்தார் என்று முந்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தளம் கந்ததோடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு மரணமடைந்தார்.தென்னை மரத்தில் குளவிகள் கூடுகட்டியிருந்த நிலையில், கடுங்காற்று காரணமாக குளவிக்கூடு உடைந்து விழுந்துள்ளதாகவும் இதன்போது குளவிகள் கலைந்து வந்து குறித்த பெண் உட்பட 15 பேரை கொட்டியுள்ளதாகவும் தெரியவருகிறது..குறித்த பெண்ணின் கணவர் உட்பட ஏனையவர்கள் பாரியளவில் குளவிக்கொட்டுக்கு உள்ளாகவில்லை.எனினும் குறித்த பெண் குளவிக்கொட்டுக்கு உள்ளான நிலையில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.இதன்போது சுமார் 1000க்கும் மேற்பட்ட குளவிகள் குறித்த பெண்ணை கொட்டியுள்ளதாகவும் குளவிக் கொட்டிலிருந்து பெண்ணை மீட்க முயன்றவர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பெண் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews