இலங்கையில் குவியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதுடன் இந்த மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 60,122 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.

அத்துடன், கடந்த மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, ரஷ்யாவில் இருந்து 8,755 சுற்றுலாப்பயணிகளும், இந்தியாவில் இருந்து 8,369 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,423 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போது பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய பல வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews