சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா!

இணுவிலில் உள்ள சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா இணுவில் பொது நூலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள், காவடி நடனம், கிராமிய நடனம், உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.  அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு வைபவம் இடம்பெற்றது.
ம.கஜந்தரூபன் அவர்கள் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ச.கிருபானந்தன், நா.கிருபாகரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சி.அழகேசன், க.வீரசக்திரூபன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், இந்த நிகழ்வில் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் ,மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews