யாழ்.பொன்னாலையில் வீடொன்றை முற்றுகையிட்ட அதிரடிப்படையினர்..!

யாழ்.பொன்னாலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு வாள்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொன்னாலை மேற்கில் உள்ள வீடொன்றில் இரண்டு வாள்கள் இருப்பதாக யாழ்.விசேட அதிரடிப்படையின்

புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையும் வட்டுக்கோட்டைபொலிசாரும் இணைந்து குறித்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

இதனையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரு வாள்கள் மீட்க்கப்பட்டது. மேலும் இரண்டு வாள்களையும் கையிருப்பில் வைத்திருந்த குறித்த வீட்டின் உரிமையாளரை  கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.மேலும் பொலிஸ் விசேடஅதிரடிப்படை குறித்த நபரையும் இரண்டு வாள்களையும்  வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த சந்தேக நபருக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிசார்

மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews