வல்வெட்டித்துறையில் இடம் பெற்ற ஒருங்கிணைந்த டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை……!

தீவிரமாக பரவக்கூடிய டெங்குநோய் அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டு  அதிகாரி தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், வல்வெட்டித்துறை நகரசபையினர், இராணுவத்தினர், போலீஸார் இலங்கை செஞ்சிலுவைச் சங்க பருத்தித்துறை பிரிவு தலைவர் செயலாளர், பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், என பலரும் கலந்துகொண்டு வீடுவீடாக சென்றும் மற்றும் வீதியோரமாக காணப்பட்டும் டெங்கு பரவக்கூடிய இடங்களையும்  சீர் செய்ததுடன் ஆதிகோவிலடியிலிருந்த வல்வெட்டித்துறை நகர்வரையும் உள்ள பாடசாலைகளில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டமை குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews