செல்வபுரம் உதயசூரியன் முன்பள்ளியில் நடைபெற்ற உணவு மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி….! 

உதயசூரியன் முன்பள்ளி மற்றும் உதயசூரியன் தாய்மார்கழகம் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச பொது வைத்திய அதிகாரி வைத்தியர் சிவசங்கரி அவர்களும், உரும்பிராய் சமூக மேம்பாட்டு ஒன்றிய தலைவர் வைத்தியர் கணேசவேல் அவர்களும், கோப்பாய் கோட்ட முன்பள்ளி இணைப்பாளரும், உரும்பிராய் முன்பள்ளி கொத்தணி தலைவி, உரும்பிராய் தெற்கு பொதுசுகாதார மாது அவர்களும், வைத்தியர் JMO, பொதுசுகாதார மாதுக்கள், பெற்றோர் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
உரும்பிராய் பகுதியில் சிறப்பாக இயங்கும் தாய்மார் கழகம் என்றும் சிறந்த முறையில் உணவுகள் தாயாரித்து காட்சிப்படுத்தப்பட்டதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்து அவர்களுக்கான சிறப்பு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews