சந்நிதியான்  ஆச்சிரமத்தால் இந்த வாரமும் பல்வேறு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி  சந்நிதியின் ஆச்சிரமத்தால் இவ் வாரமும்  பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வாராந்தம் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறுகின்ற வாராந்த நிகழ்வில் இன்று தெரிவு செய்யப்படட 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அத்ததுடன் பாடசாலை ஒன்றிக்கான மாணவர்களின் கற்றல் செயட்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்க பட்டுள்ளதுடன் வாராந்த சொற்பொழிவும் இடம்பெற்றது. சொற்பொழிவினை இணுவில் ஆசிரியர் திரு வாகீசன் வழங்கினார்.

சந்நிதியின் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில்  இடம் பெற்ற நிகழ்வில் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியின் அடியார்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews