வவுனியாவில் ஆலய திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா! –

வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதாகவும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடு கிடைத்ததை அடுத்து அப்பகுதிக்கு சென்ற சுகாதார பிரிவினர், அங்கு இருந்தவர்களுக்கு அன்ரியன் பரிசோதனையினை முன்னெடுத்தனர்.
இதன்போது ஆலயத்தின் குருக்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணியவர்களுக்கு நேற்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தொற்று உறுதியானவர்கள் அவர்களது குடும்பங்களுடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews