யாழ்.பல்கலைகழக பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி மறுத்தார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்! |

யாழ்.பல்கலைகழக 35வது பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு அனுமதிகோரி துணைவேந்தர் முன்வைத்த கோரிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. 

அக்டோபர் மாதம் 7ம் திகதி பல்கலைகழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவை நடாத்த அனுமதி வழங்குமாறுகோரி இந்த கோரிக்கை சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில் சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் நாட்டின் கொரோனா நிலவரம் அடுத்துவரும் நாட்களில் சாதகமாக அமைந்தால் கோரிக்கையை பரிசீலணைக்கு எடுப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்திருக்கின்றார்.

இது குறித்து பணிப்பாளர் நாயகம் அனப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டில் கொரோனா அபாயம் காரணமாக ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதிக்க முடியாதுள்ளது.

எனினும் அடுத்துவரும் நாட்களில் கொரோனா நிலைமை சாதகமாக அமைந்தால் கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாகவும், பட்டமளிப்பு விழா நடத்துவதில் ஆட்சேபனை எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews