மதுபானசாலைகள் திறக்கப்பட்டத்தில் சர்ச்சை..!

நாட்டில் மதுபானசாலைகளை திறப்பதற்கு உத்தியோகபூர்வமான அறிவித்தல் வழங்கப்படவில்லை. என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தொிவித்திருக்கின்றார்.

ஆனாலும் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமைக்கு காரணம் நிதி அமைச்சிலிருந்து வழங்கப்பட்ட உத்தியோகபூர்வமாற்ற தகவல் என கூறப்படுகின்றது. மதுபானசாலைகள் திறப்பு தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடந்துள்ளது.

எனினும் மதுபானசாலைகளை திறக்கும் அனுமதியை நிதியமைச்சே வழங்கியுள்ளது. எனினும் அந்த அனுமதி உத்தியோகபூர்வமற்றது. மதுபானசாலைகளை திறப்பது தொடர்பாக உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியாகும் முன்னர்

ஊடகங்களுக்கு தகவல் கசிந்தள்ளது. அதனைத் தொடர்ந்தே மதுபானசாலைகள் திறக்கப்பட்டு மதுபான சாலைகள் முன்பு ஏராளமனவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவைக் கொள்வனவு செய்தனர். 

அத்துடன், மதுபான சாலைகள் முன்பான பொலிஸாரும் நின்று பாதுகாப்பு வழங்கினர். இதற்கிடையில் மதுவரித் திணைக்கள உரிமம் பெற்ற வைன் விற்பனை நிலையங்கள் (FL 04 உரிமம்) மற்றும் பியர் மற்றும் வைன் கடைகள்

( FL 22 B உரிமம்) கொண்ட மதுக்கடைகள் திறக்க முறைசார அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews