முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு…!

யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு ரக்ஸி மீற்றர் பூட்டி அதனுடைய ஒழுங்கமைப்புகள் சரியாக அமைப்பதற்கான முக்கியமான ஒரு கலந்துரையாடல் இன்றைய தினம் 06.07.2023 நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் இதற்கு முன்னரும் இரண்டு மூன்று தடவைகள் நடைபெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் சில முக்கியமான முடிவுகளை கட்டக் கூடியதாக இருந்தது என யாழ். பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜரூல் தெரிவித்தார்.

இன்றைய தினம் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவில்லையே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதாவது எதிர்வரும் 15 ஆம் தேதிக்கு முதல், இந்த ரக்ஸி மீற்றர்கள் பூட்ட வேண்டிய முச்சக்கர வண்டிகள் ரக்ஸி மீற்றர்களை பூட்டி, 20,21,22 ஆகிய திகதிகளில் பொலிஸாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். அதன் பின்னர் தான் அவர்கள் சட்டபூர்வமாக இங்கு உள்ள முச்சக்கர வண்டி தரிப்பு நிலையங்களில் நின்று முச்சக்கர வண்டிகள் செலுத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.
அப்படி இல்லை என்று சொன்னால் ரக்ஸி மீற்றர் பூட்டாமல், பொலிஸ் ஸ்டிக்கரும் இல்லாமல் ஓடப்படும் முச்சக்கர வண்டிகள் தொடர்பாக கவனத்தில் கொண்டு வந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற தீர்மானமும் எட்டப்பட்டுள்ளது.
ஆகவே இது சம்பந்தமாக நாளையில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். நாளைய தினம் தரிப்பட நிலையங்களுக்குச் சென்று, உச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இதை எடுத்துக் கூறி, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் இந்த நடவடிக்கைகளை சட்டபூர்வமாக அமலாக்க உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews