பெற்றோருக்குத் தெரியாது வீட்டில் குழந்தையை பிரசவித்த 14 வயது சிறுமி!

கண்டி மாவட்டத்தில் பூஜாபிட்டிய பகுதியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 29 வயதான திருமணமான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் சிறுமி சந்தேகநபருடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ள நிலையில், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இதன் விளைவாக சிறுமி கர்ப்பமடைந்துள்ள நிலையில், தான் கருவுற்றிருப்பதை வீட்டாருக்கு தெரிவிக்காமல் மூடிமறைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சிறுமி தனது வீட்டிலேயே குழந்தையொன்றை பிரசவித்துள்ள நிலையில், கடுமையான இரத்தப்போக்கு காரணமாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கலகெதரவைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பூஜாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews