இலங்கையின் திருமதி அழகு ராணியான புஷ்பிகா டி சில்வாவும் அங்கு இருந்துள்ளாரா….???

கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தற்போது சூடுபிடித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில் லொகான் ஆர்வத்தை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிறைச்சாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது இலங்கையின் திருமதி அழகு ராணியான புஷ்பிகா டி சில்வாவும் அங்கு இருந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் புஷ்பிகா டி சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி குறித்த தகவலை மறுத்து அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

அத்துடன், சம்பவ இடத்தில் தான் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் மாத்தறையில் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews