தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்க்காகவே ரணிலின் தமிழ் பௌத்த விவகார கருத்துக்கள்…! அரசியல் ஆய்வாளர் சி. அ.யோதிலிங்கம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்க்காகவே ஜனாதிபதி ரணிலின் விக்கிரம சிங்க  தமிழ் பௌத்த கருத்துக்கள், மற்றும் தொல்லியல் திணைக்கள தலைவர் மீதான நடவடிக்கை என  அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி. அ.யோதிலிங்கம் எதெரிவித்துள்ளார் அவர் இன்று தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய  தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டு அடுத்த நாளே  ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கை தமிழ் அரசு கட்சி பிரதிநிதிகளைக்  கூப்பிட்டு கலந்துரையாடியிருக்கிறார்.
அதிலும் சம்மந்தனும்   தள்ளாத வயதில் கூட, இயலாத நிலையில் கூட, அந்த கலந்துரையடலில் பங்குபற்றியிருக்கின்றார்.
 பிரதானமாக அங்கு பேசப்பட்ட விஷயம் இந்த  தொல்லியல் திணைக்களத்தினுடைய ஆக்கிரமிப்பு சம்பந்தமான விடயங்கள்.
தொல்லியல் திணைக்களத்தினுடைய.  தலைவரும் அதில் கலந்து கொண்டிருந்தார்.
அதில் தமிழ் அரசியல் தலைவர்கள் இங்கே நடக்கின்ற தொல்லியல் ஆக்கிரமிப்புக்களை, தொடர்பில் விலா வாரியாக, ஒழுங்காக  எடுத்துரைத்திருந்தார்கள்.
இது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருந்தது.
உண்மையில் தொல்லியல் திணைக்களம் அரசாங்கத்தினுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றுகூட  சொல்லிவிட முடியாது.
தொல்லியல் திணைக்களத்திற்க்கான நிதி  அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திலிருந்து மட்டிம் போவது அல்ல. அரசாங்க வரவு செலவு திட்டத்திலிருந்து செல்லும் நிதி  விகாரைகளை கட்டுவதற்க்கு போதுமானது அல்ல.
 அவர்களுக்கு வெளியிலும் எங்கிருந்தோ நிதி   செல்கிறது. இதனை அவர்களே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  விகாரைகள் கட்டுவதற்குரிய செலவுகள் அனைத்தையும் நாங்கள் வெளியில் இருந்து தான் பெற்றுக் கொள்கிறோம் என்று.
இப்பியாக ஜனாதிபதி ரணில்  ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு  நிதியைப் பெற்று ஒரு தணைக்களம் செலவு செய்ய முடியாது என்று. ஆகவே இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
 இதற்கு அடுத்த நாள் மகாநாயக்கர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்டு மட்டுமல்லாமல்  அவர்கள் கடிதம் ஒன்றிணையும் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார்கள்.
அதில் வெளியில் இருந்து வருகின்ற நிதியை நீங்கள் நிறுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
 தொல்லியல் திணைக்களம் அரசாங்கத்தினுடைய ஒரு கட்டுப்பாட்டிற்குள் இயகக்கும்  நிறுவனம்  இல்லாமல் அது தனித்து செயல்படுகின்ற ஒரு நிலைமையை காண முடிகிறது. ஒரு விரிவான நீண்டகால  திட்டத்தின் அடிப்படையில் தான் அவர்கள் செயல்படுகிறார்கள்
அந்த விரிவான திட்டம் என்பது பௌத்த மதத்தை ஒரு  ஆக்கிரமிப்பு சக்தியாக பயன்படுத்தி,  அதனூடாக தமிழ் மக்கள் மத்தியிலே ஒருவகையான  இன. அழிப்பை செய்வது.
இனத்தை அழிப்பது என்றால் மொழியை அழிப்பது,  கலாச்சாரத்தை அழிப்பது,  பொருளாதாரத்தை அழிப்பது,  உட்பட்ட விடியங்கள் உள்ளடங்கும்.
இந்த பௌத்த விகாரைகளை கட்டுகின்ற விவகாரம் ஒரு கலாச்சார அழிப்பாகவே மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஒரு பாரிய  எதிர்ப்பு  வரக் கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் மக்களுடைய  விவகாரம்  சர்வதேச பயப்படுத்தப்பட்டு இருக்கின்ற ஒரு சூழலில் இதற்கு பதில் வழங்க வேண்டிய தேவையும்  அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வந்திருக்கின்றது. அந்தப் பொறுப்பும் இன்று வந்திருக்கின்றது.
இந்த விவகாரத்தை வலுவாக  நொதிக்கச் செய்தவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தான்.  தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன.
இந்த விவகாரத்தை நொதிக்க செய்து சர்வதேச மட்டத்தில் கொண்டு வந்தது அதனை ஒரு பேசு பொருளாக கொண்டு வந்தது  தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடைய  செயற்பாடுதான்.
இதனை ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்ய வேண்டிய தேவை அதேவேளை சமரசம் செய்வதன் ஊடகா இந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் வெளியில் பிரச்சாரம் ஆகாமல் தடுக்கவேண்டிய தேவையும்,  ஜனாதிபதிக்கு  இருக்கின்றது.
 தமிழ் தேசிய மக்கள் முன்னணின்  தலைவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர்களது மூன்று உறுப்பினர்களை விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதனுடைய நோக்கமே என்னவென்றால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் லிமிற்றேசனை என்னவென்று புரிய வைப்பதுதான்.
அதாவது இதற்க்கு மேலே நீங்கள் செல்வீர்களே ஆனால் தலைவர்கள் என்று பார்க்காமல் நாங்கள் அவர்களையும் கைது செய்வோம்
என்ற செய்தியை அரசாங்கம் சொல்லியிருக்கிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடுகளை ஏதோ ஒரு வகையில் முடக்க வேண்டும் என்றால் இங்காலே பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தான்  ஏதோ செய்கிறேன் என்பதை வெளிக்காட்ட வேண்டிய தேவையும் இருக்கிறது. என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews