கிழக்கில் 15 ஆயிரம் குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்க பொறிமுறைகளை வழங்குமாறு மின்சாரசபை அதிகாரிகளுக்கு கிழக்கு ஆளுநர் பணிப்புரை

கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் இன்றி வசித்துவரும்  15 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறிமுறைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சாரசபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (6) ஆளுநருக்கும் கிழக்கு மாகாண மின்சார சபை பிரதி பொதுமுகாமையானர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரவயாடல் இடம்பெற்றது.

இதன் போது காற்று மின்சாரம், சூரிய ஆற்றல், நீர் மின்சாரம் போன்ற புதுப்பிக்கதக்க ஆற்றல் வளங்களை கொண்ட முழுமையாக இயங்ககூடிய மின்சாரத்தை வழங்கும் இலங்கையில் முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவதற்கான ஆய்வினை மேற்கொண்டு அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும்

அதேபோல கிழக்கில் 15 ம் ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறிமுறைகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews