நாவற்குழியில் பசுமை அறிவொளி பசுமை இயக்கத்தின் சூழல்தின நிகழ்ச்சி..!

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழியில்  திங்கட்கிழமை ( 05 06.2023 ) பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடாத்தியுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் அறிவைப்புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இதன் தொடரச்சியாகவே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழி முத்தமிழ் கிராமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
 இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபை ‘ பிளாஸ்ரிக் மாசைத் தோற்கடிப்போம் ‘ என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது. இக்கருப்பொருளுக்கு அமைவாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் இந்நிகழ்ச்சியில் உரையாற்றியதோடு பங்கேற்ற மாணவர்களுக்கு பிளாஸ்ரிக்கின் பிடியில் ‘ என்ற கைநூலையும் , வழங்கி வைத்தார்.
அத்தோடு, ரொறன்ரோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையோடு மாணவர்கள் அனைவருக்கும் அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews