அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவரும் களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்திய நிபுணர் ருக்ஷான் பெல்லன கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.
தற்போது அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அண்மையில் அவர் சுகவீனமுற்றதை அடுத்து மேற்கொண்ட பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.