கொரோனா மரணங்கள் தொடர்பில் மக்கள் அசமந்தம்…..!சுகாதார தரப்பினர் கவலை!

வவுனியாவில் இம் மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 45 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில், கொரோனா மரணங்கள் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அசமந்தமாக இருப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து செல்கின்றது. ஒரு வாரத்திற்கு ஒரு மரணம் என இருந்த நிலையில் கடந்த வாரம் 45 மரணம் சம்பவித்துள்ளது.
நாட்டில் ஏற்படும் மரண வீதத்தில் வவுனியாவில் மரணிப்போரின் தொகை பாரியளவில் காணப்படுகின்றது என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் மக்களின் அசமந்தமான செயற்பாட்டால் மரண தொகை கட்டுக்கடங்காமல் செல்கின்றது. மக்கள் இதன் பாரதூரமான தன்மையை உணரவில்லை எனவும் கூறியுள்ளனர்.
வவுனியா மக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளாதால் அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பதை மனதில் கொண்டு ஒரே தடவையில் ஊசி ஏற்றும் நிலையங்களில் கூடுவதை தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews