பூசா சிறைச்சாலையில் மேலும் 11 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 11 கைதிகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை குறித்த சிறைச்சாலையில் தொற்றுக்கு உள்ளான கைதிகளின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்வடைந்துள்ளது.