G.C.E A/L மற்றும் G.C.E O/L தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான உத்தேச திகதிகள் வெளியீடு.. |

க.பொ.த உயர்தரம், சாதாரணதரம் மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான உத்தேச திகதிகளை கல்வியமைச்சின் பாடசாலை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன வெளியிட்டுள்ளார்.

இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இவ்வருடம் நவம்பர் 14 ஆம் திகதியும் ,உயர்தர பரீட்சையை நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையும், சாதாரண தர பரீட்சையை அடுத்த வருடம் பெப்ரவரி 21 ஆம் திகதியிலிருந்து மார்ச் 3 ஆம் திகதி வரையும்

நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தின் கருத்துக்களை அறிந்து ,மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே செயலாளர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews