கடற் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் அனுமதி வழங்கியது பொய்யானது — மட்டு மாவட்ட மீனவர் சங்கங்கள் கடும் கண்டனம்!!

கடற் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அனுமதி பத்திரம் வழங்கியுள்ளார் என்பது பொய்யான பிரச்சாரம் எனவே அந்த உண்மைக்கு புறம்பான  இவ் பிரச்சாரத்துக்கு மட்டு மாவட்ட மீனவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வெஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் தலைவர் நற்குணம் பத்மநாதன், முகைதீன் ஆள்கடல் மற்றும் வாவி  கூட்டுறவு சங்க செயலாளர் வை.எல்.பள்ளித்தம்பி ஆகியேர் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தனர்.

கடந்த 2019 ம் தொடக்கம் மட்டு மாவட்டத்தில் சங்கு, இறால், கடல்பிஸ், அட்டை, எல்லாம் பிடிக்கும் அனுமதிப்பத்திரம் வழங்கியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வர்தமானியில் பிரசுரிக்கப்பட்டு நாரா அமைப்பால் வழங்கப்படது.

இந்த நிலையில் அன்றில் இருந்து 13 வருடமாக ஒரு சங்கத்தில் பொருளாராக இருக்கின்றேன் அட்டை பிடிக்கும் மாவட்ட சம்மேளன தலைவராக இருக்கின்றேன் இதுவரை எந்தவிதமான பிரச்சனைகள் இல்லை இருந்தபோதும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடற்தொழில் இல்லாதவர்களுக்கு மீன்பிடி அமைச்சர் அட்டை பிடிக்க அனுமதிபத்திரம் வழங்கியதாக பெய்யான பிரச்சாரங்கள் சில ஊடகங்கள் ஊடாக வெளிவந்துள்ளது

எனவே நாங்கள் மீனவர்கள் இல்லையா? எங்களுக்கு தான் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது இது சட்டரீதியாக வழங்கப்பட்டது இருந்தபோதும் சிலர் இந்த விசமத்தனமான பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு குழப்பி வருகின்றனர். எனவே இவ்வாறான ஆதாரமற்ற பொய் குற்றச்சபட்டை மீனவர் சங்கங்கள் வன்மையாக கண்டிக்கின்றது.

அதேவேளை மண்ணெணைய் சரியான பிரச்சனை காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பிற்கு வரவேண்டியுள்ளது முதல் ஒரு லீற்றர் மண்ணெணைய் 70 ரூபாவாக இருந்த இப்போ 305 ரூபா எப்படி தொழில் செய்யமுடியும் அவ்வாறே மின்சாரத்தின் விலை அதிகரிப்பு முதலில் 1500 ரூபா வந்த மின்சார பட்டியல் தற்போது 3500 ரூபாவாக வருகின்றது எப்படி பணத்தை செலுத்த முடியம் மிகவும் கஷ;டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்

இலங்கை மீனவர்களுக்கு சரியான கஷ;டம் இருந்தபோதும் அழுகின்றதா சாகின்றதா என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே இருக்கின்ற அரசாவது தொழிலாளர்களுக்கு திட்டமிட்டு உதவிகள் செய்ய வேண்டியுள்ளதுடன் எங்களுக்கு உரிய கடல் தொழில் மற்றும் அட்டை மீன் பிடிக்கின்ற வழங்களை அரசாங்கம் பெற்றுதரவேண்டும்

அதேவேளை வடக்கில் இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் றோலர் படகுகளில் ஊடுருவி வந்து மீனை பிடித்து செல்வதால் எங்களது மீனவர்களுக்கு மீன்பிடிக்க முடியாதுள்ளது எனவே இந்திய மீனவர்களை முற்றாக எதிர்க்கின்றோம்.

அதேவேளை அமைச்சர் டக்கிளஸ் தேவபனந்தா மீன்பி அமைச்சராக பதவி ஏற்றதும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து பல உதவிகளை செய்து வருவதுடன் சங்கு, இறால், கடல்பிஸ், அட்டை, பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் பெற்று தந்துள்ளர் அவருக்கு நன்றிகள்.

Recommended For You

About the Author: Editor Elukainews