கிளிநொச்சி வட்டக்கச்சி விநாயகர் வீதியை அபிவிருத்ததி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்குமாறு கவனயீர்ப்பு…!

கிளிநொச்சி வட்டக்கச்சி விநாயகர் வீதியை அபிவிருத்ததி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்குமாறு இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மக்கள் முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கூடிய மக்கள், கவனயீர்ப்பில் ஈடுபட்டு மாவட்ட செயலக வளாகத்தை சென்றடைந்தனர்.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த மக்களுடன் கலந்துரையாடினர். இதன்போது, குறித்த வீதியை அபிவிருத்தி செய்வதற்கு ஒரு சிலர் இடையூறு விளைவிப்பதாகவும், அதனால் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மாணவர்கள் என பலரும் பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் கேட்டறிந்த மேலதிக அரசாங்க அதிபர், அதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும், மாவட்ட அரசாங்க அதிபர் இல்லாமையால் அவரை சந்திக்க முடியாது எனவும் குறிப்பிட்டதுடன், அரசாங்க அதிபர் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை முன்னெடுப்பார் எனவும் தெரிவித்தார்.
இதன்போது பிரதேச மக்களும், முன்னைநாள் பிரதேச சபை உறுப்பினர்களான மு.சிவமோகன்,ஜீவராஜ் ஆகியுார் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.
 

Recommended For You

About the Author: Editor Elukainews