அதிரடியாக குறையும் எரிபொருள் விலை: மின் கட்டணத்துக்கும் நிவாரணம்!

நாட்டு மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அடுத்த மாதம் எரிபொருள் விலை கணிசமான அளவு குறைக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அத்துடன், டிசம்பர் மாதம் மின் கட்டணத்துக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மசகு எண்ணெய் விலை குறைந்து, ரூபாவின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே எனக்கு பணிப்புரை விடுத்துள்ளார்’ என அமைச்சர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews