யாழ்.வட்டுக்கோட்டையில் பெண்ணை வீதியில் தள்ளி விழுந்தி சங்கிலி அறுப்பு!

யாழ்.வட்டுக்கோட்டை – அராலி – செட்டியார்மடம் பகுதியில் வைத்து பெண் ஒருவரது ஒரு பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,குறித்த பெண்ணும் அவரது உறவினரும் இன்று  அராலி வீதியால் யாழ்.நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களைக் கீழே தள்ளி விழுத்திவிட்டு சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews