கூட்டுறவு திணைக்களத்தில் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பவர்கள், கட்சி சார்பானவர்கள் ஜனநாயக மறுப்பில் ஈடுபடுகின்றனர்- பா.உ.சி.சிறிதரன்

யாழ் மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தில் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பவர்கள், கட்சி  சார்பானவர்கள் ஜனநாயக மறுப்பில் ஈடுபடுகின்றனர், என்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்  கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்க்கு எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி நியமன அடிப்படையில் ஒரு கட்சி சார்ந்தவர்களை நியமனம் செய்வதையும் கண்டிப்பாதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சி கிழக்கு  பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது .
இப்பொழுது இந்த நாட்டிலே தேர்தலைகளை  ஒத்திவைப்பதற்க்கு  அரசாங்கம் தான் முயற்சிக்கிறது. என்று பார்த்தால் இங்கே நடக்கின்ற உள்ளூர் ஜனநாயக அமைப்புக்களான இந்த கூட்டுறவு  சங்கங்களின் கூட. மிக இலகுவாக கூட்டுறவு சங்க நிதியிலேயே நடாத்தப்படுகின்ற. இந்த தேர்தல்களை நடாத்தாமல் நடாத்தி தற்செயலாக அதில் யாரும் வெற்றி பெற்றிருந்தால் அது தங்களுடைய கட்சிகளுக்கு  தொடர்பில்லை அல்லது அவர்கள்  தங்களுடைய கட்சிக்கு சார்பானவர்கள் இல்லை என்றால் அதையும் தடுத்து நிறுத்தி சில கட்சி சார்ந்தவர்கள் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பவர்கள் இந்த ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.
அதிலே ஒரு விடயம் தான் இந்த வடமராட்சி கிழக்கிலே நடைபெற்றிருப்பது. ஆகவே இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.  நாங்கள் இது தொடர்பாக பல இடங்களிலே பல தடவைகள் குறிப்பிட்டிருக்கின்றோம். நான் நினைக்கின்றேன் கூட்டுறவு ஆணையாளர் இதிலே ஒரு தெளிவான முறையோடும், தெளிவான  நடவடிக்கையோடும் செயற்பட வேண்டும்.  இல்லையானால் சட்ட பூர்வமான நடவடிக்கைகளுக்கும் எதிர்கலாத்திலே தான் நடந்து கொண்டது பிழை என்பதற்க்கான காரணங்களை  நிருவிக்கக்கூடிய  தேவைகளும் ஏற்படலாம் .
ஆகவே இது ஒரு ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டிய தெரிவுகள், அந்த ஜநாயக முறைப்படியான. தெரிவுகளை சரியான முறையில் மேற் கொள்வதற்க்கு அவர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை  கோரிக்கையாக முன் வைக்கின்றோம் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews