சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வுத் திட்டமே எமது எதிர்பார்ப்பு:கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

13ஆம் திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல, அதனை ஒரு ஆரம்பப்புள்ளியாகக் கூட கருத முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் (09.02.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,“13ஆம் திருத்தச்சட்டத்தை ஒரு பேச்சுப்பொருளாக கூட கருதவில்லை, இது தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுவதைக் கூட நாம் விரும்பவில்லை.

13ஆம் திருத்தச்சட்டத்தை சிங்கள பௌத்த பேரினவாதிகள் எதிர்ப்பதற்குக் காரணம் அது இந்தியாவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை  மற்றும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை இல்லாது செய்வதற்குமே ஆகும்.

இந்த திருத்தச்சட்டம் மூலாமாக தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதுடன் இது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒன்றாகவே விளங்குகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews