உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்!

உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதற்கமைய தற்போதைய தகவல்களின் படி,இதுவரையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20,000 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைவரையும் பதற வைக்கும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்! வெளியான மற்றொரு அதிர்ச்சி தகவல் | Turkey Earthquake School Volleyball Team Missing

இந்த துருக்கி நிலநடுக்கத்திற்கு பின்னர் ஒரு பாடசாலையின் கைப்பந்து அணியிலுள்ள அனைவரும் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் குறித்த அணியினர் தங்கியிருந்த உணவக கட்டடம் மொத்தமாக தரைமட்டமானதாக தெரியவந்ததையடுத்து வெளியாகியுள்ளது.

பாடசாலை கைப்பந்து அணி

துருக்கியின் ஆக்கிரமிப்பு சைப்ரஸில் இருந்து தெற்கு துருக்கிக்கு பயணம் செய்த உயர்நிலைப் பாடசாலை கைப்பந்து அணியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 பேர் மொத்தமாக இறந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது இளைஞர்களும் அவர்களது ஆசிரியர்களும் அதியமான் நகரின் மையத்தில் உள்ள ஐசியாஸ் விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

அதியமான் நகரில் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாககியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், அந்த கைப்பந்து அணியிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை என்றே உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, Namik Kemal உயர்நிலைப் பாடசாலையை சேர்ந்த ஒரு குழு, Maarif Turkish கல்லூரியை சேர்ந்த ஒரு குழுவும் மாயமானதாக அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளனர்.

உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்! வெளியான மற்றொரு அதிர்ச்சி தகவல் | Turkey Earthquake School Volleyball Team Missing

கைப்பந்து அணி மொத்தமாக மாயமான தகவல் வெளியானதும் உறவினர்கள் மற்றும் மீட்பு அதிகாரிகள் தரப்பு அதியமான் நகருக்கு விரைந்துள்ளனர்.

கைப்பந்து அணியினர் தங்கியிருந்த 8 மாடி உணவகமானது மொத்தமாக உருக்குலைந்துள்ளது. இருப்பினும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிருடன் இருக்கலாம் என்றே நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews