லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 121 தொற்றாளர்கள்

லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த மூன்று தினங்களுக்குள் 121 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 225 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளிலேயே 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

போப்பத்தலாவ, ஹோல்புறூக், மெராயா, ரஹன்வத்த உள்ளிட்ட பிரதேசங்களிலேயே தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews