ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய இரட்டை குண்டுவெடிப்பு – ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது –

இதற்கிடையில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாட போவதாக எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டில் இருந்து, எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மீட்டு வருகின்றன.

சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன. இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது.

இதற்காக, காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

இதேவேளை ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு பின்னர் காபூலில் மீட்புப்பணிகளும் நிறுத்தப்பட்டு படைகள் முழுவதும் திரும்பப் பெறப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால், ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்தவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்திலேயே நேற்றைய தினம் இடம்பெற்ற இரட்டை குண்டிவெடிப்பு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 73 பேர் பலியாகினர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படையினரும் 60 பேர் ஆப்கானிய பொதுமக்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews