தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 626 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாத் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், மேல் மாகாணத்துக்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் 13 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்று மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் பகுதியில், 307 வாகனங்களில் பயணித்த 515 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், மேல் மாகாணத்துக்குப் பிரவேசித்த 302 வாகனங்களில் பயணித்த 580 பேர் சோதனைச்சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews