இருமல் மருந்தை உட்கொண்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்! இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சின் தகவல்

உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட, இந்திய நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த இருமல் மருந்தை  உட்கொண்டு 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சரின் உத்தரவின் படி மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உஸ்பெகிஸ்தானின் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளருடன் தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட நிறுவனத்தில் மீது உத்தரப்பிரதேச மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கோண்ட போது மருந்து தயாரிப்பு நெறிமுறைகளை மரியன் பயோடெக் நிறுவனம் மீறியிருப்பது தெரியவந்ததனை அடுத்து நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் நிறுத்துமாறு உத்தரப்பிரதேச மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஆணை பிறப்பித்துள்ளது.

குழந்தைகள் பலியானது தொடர்பில் உஸ்பெகிஸ்தான் இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக முறையிடவில்லை என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு கூறியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews