யாழ்.நயினாதீவில் மரணச் சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்! பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.நயினாதீவில் மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த திங்கள் கிழமை நயினாதீவில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவருடைய மரணச் சடங்கில் கிராம மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மரணச்சடங்கிற்கு மறுநாளே உயிரிழந்தவரின் சகோதரி உள்ளிட்ட சிலர் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில்

3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. உயிரிழப்பவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதியான பின்னர்

மட்டுமே சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடைமுறை நாடு முழுவதும் அமுலில் உள்ளபோதும் யாழ்.தீவகத்தில் இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளதா?

என்ற கேள்வி எழுப்பபடுவதுடன், உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

சம்பவத்தினை அடுத்து மரணச்சடங்களில் பங்கேற்றவர்கள், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் என கிராமத்து மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

Recommended For You

About the Author: Editor Elukainews