அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று! சுய தீர்மானத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட மாவட்டச் செயலர்,!

யாழ்.மாவட்டச் செயலரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் தாமாகவே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தனது அலுவலகத்தில் ஒரு பணியாளருக்கு தொற்று உறுதியான நிலையில் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தனது வீட்டிலிருந்து மாவட்ட செயலர் பணிகளை ஆற்றிவருகின்றார்.

இதேபோல் மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனும் தொற்று அபாயம் ஏற்படும் என்பதை உணர்ந்து முன்கூட்டியே தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனாலும் யாழ்ப்பாணத்தில் பலர் பொறுப்புணர்வற்று இப்போதும் உள்ளனர்.

குறிப்பாக அண்மையில் ஒரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பலருக்கு தொற்று உறுதியானபோதும் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த பணிமனை தொடர்ந்து இயங்குவதாக அங்கு பணியாற்றும் ஊழியர்களே குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews