வடக்கிலும் கட்சி செயற்பாடுகளை விஸ்த்தரிக்கும் கருணா அம்மான்!

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி சார்பில் வடக்கில் தேர்தல் நடவடிக்கைக்காக தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் நடவடிக்கை இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அரச கட்சியை பிரதிநிதித்துவம் செய்து போட்டியிட்ட கருணா அம்மான் எதிர்பாராத தோல்வியை சந்தித்திருந்த நிலையில் வடக்கில் காலுன்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

இதற்காக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பில் வடக்குமாகாண அமைப்பாளராக ஜெயக்குமாரும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக கௌதமும் மற்றும் வடமாகாண ஊடக செயலாளராக கமலகாசனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Recommended For You

About the Author: Editor Elukainews