பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்களின் விலைகளின் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்…!நாட்டு மக்களுக்கு பேரிடி

பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்களின் விலைகள் தவிர்க்க முடியாமல் உயரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கிகள் டொலர்களை விடுவிக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, உலர் பழங்கள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, அவற்றை இறக்குமதி செய்யும் நாடுகளின் விற்பனை விலையைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.

அவற்றில் சிலவற்றின் உற்பத்தி குறைந்ததால், அந்நாடுகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் இந்த உணவுப் பொருட்களின் தேவை அதிகரிப்பதன் காரணமாக விலைகள் பாரிய அளவில் உயரும்.

நாட்டில் தற்போதுள்ள இறக்குமதி வரிகள் மற்றும் தீர்வை வரிகளும் உணவுப் பொருட்களின் விலையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவற்றின் வரிகள் அதிகரிக்கப்பட்டால், அதுவும் விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருட்களின் விலை எங்கள் கையில் இல்லை என இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திடம் நிலையான வரிக் கொள்கை இல்லை எனவும், அவ்வப்போது வர்த்தமானி மூலம் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிலையான விலையை நிலைநிறுத்துவது கடினம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews