அச்சுறுத்தல்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அஞ்சமாட்டோம் – சஜித்

அச்சுறுத்தல்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவ்வாறான கட்டுப்பாடுகளால் தம்மைத் தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மாவனல்லை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார். ‘இப்போது நாட்டில் எல்லாமே தலைகீழாகவே நடக்கிறது. நாட்டு மக்கள் ஒன்றாக கூடுவது தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். அனுமதியின்றி வீதியில் செல்ல வேண்டாம் எனக் கூறுவதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் என்ன? அவர் அவ்வாறு ஏதேனும் சவால் விடுத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் வீதியில் இறங்க, ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது. நாட்டின் அனைத்துத் துறைகளும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளன. நாட்டை இவ்வாறான நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று சாம்பலைத் துடைத்துவிட்டு மீண்டும் எழுச்சி பெற முயற்சிக்கின்றனர்’ என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews