அம்பாறை மாவட்ட தமிழ் சமூத்தை அழிக்கும் செயற்பாட்டில் நா. உ .ஹரீஸ் – கலையரசன் குற்றச்சாட்டு…!

கல்முனையில் தமிழ் சமூத்தை அழிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிருவாகத்தை முடக்குவதற்கு பல குழுக்களை உருவாக்கியும், கிராம ரீதியான எல்லையை நிர்ணயித்தும், குளங்களை மண்போட்டு நிரப்பியும், தமிழ் மக்களின் பூர்வீக இடங்களை கபளீரம் செய்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கின்ற செயற்பாட்டினை செய்து வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் வித்தியாலய அதிபர் மற்றும் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் நேற்று செவ்வாய்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட நா.உ.ரி.கலையரசன் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்த காலம் அதை நாங்கள் மறக்கமுடியாது. நாங்கள் கல்வியை தேடி கற்றவர்கள். இருந்துபோதும் இந்த பிரதேசத்தை மேம்படவேண்டும் என இருந்தவர்கள் அந்த கால கட்டத்தில் இந்த பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி எஸ்.சிறியபுஸ்பம் அதிபராக பதிவியேற்றிருந்தார். அப்போது நான் மாகாணசபை உறுப்பினராக இருந்தபோது அவர் அடிக்கடி என்னை சந்தித்து இந்த பாடசாலையின் வளர்ச்சியும் கல்வி மேம்படுபற்றி பேசுவார்.

இந்த பிரதேசத்தில் அதிபர்கள் அதிகமா இருக்கின்றனர். இதில் சிலர் பாடசாலையின் கடமைகளை செய்துவிட்டு போகவேண்டும் என்ற சிந்தனையில் இருக்கின்றனர். ஆனால் இந்த பாடசாலையின் அதிபர் அரசியல்வாதிகளை மாத்திர மல்ல மாகாண ஆளுநரை சந்தித்த்து இந்த பாடசாலையின் குறை பாடுகளை எடுத்துரைத்து வழங்களை தேடிப் பெற்ற ஒரு பெரும் சேவையாளராக பாடசாலையின் அதிபர் இருக்கின்றார்.

எனவே சமூகத்தை சிறந்த ஒரு வழிநடத்தக்கூடிய தலைவராக இவர் திகழ்வார் என்பதற்கு இன்றைய விருதுகள் சான்றாக அமைகின்றது. பாராட்டுகின்றேன் இந்த சொறிக்கல்முனை மக்களால் இவ்வாறான விழா எடுக்கப்பட்டு இவருக்கு பாரட்டு செய்வது என்பது உண்மையிலே பெரும் சிறப்பாக அமைந்துள்ளது.

இன்று ஒழுக்க கல்வி என்பது மிக முக்கியமானது ஆசிரியர்களை நேசிக்கின்ற மாணவர்கள் குறைந்தளவிலே காணப்படுகின்றனர். அது ஒரு மனவேதனையான விடயம். எழுத்தறிவித்தவன் இறைவன் என்று சொல்வார்கள். அதனை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். மாணவர்களே உங்களை உருவாக்குவதற்காக அல்லும் பகலும் உழைக்கின்ற அவர்களுக்குரிய மரியாதையை கன்னியத்தையும் வழங்கவேண்டும். அவ்வாறு வழங்குவதன் மூலம் தான் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக வரமுடியும்.

இந்த நாட்டிலே நாங்கள் சம்மாந்துறை வலயமாக இருந்தாலும் சரி, கல்முனை வலயமாக இருந்தாலும் சரி, நாங்கள் சிறுபான்மையாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த கல்வியில் பல கசப்பான சம்பவங்களை நாங்கள் சந்தித்தவர்கள். ஏன் என்றால் அதிகஷ்டப் பிரதேசம் என தெரிவித்து தொழிலுக்காக ஆசிரியர் நியமனங்களை பெற்று வந்து அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி இடைமாற்றம் சென்ற வரலாறு இருந்து கொண்டிருக்கின்றது.

கல்முனை மாவட்டத்தில் மேலதிகமாக ஆசிரியர்கள் இருப்பதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் மிகவும் துணிகரமாக பேசினார். கடந்த காலத்தில் எந்த கல்வி பணிப்பாளர்களும் இந்த கருத்தை முன்வைக்கவில்லை. மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் இந்த விடையம் பிரஸ்தாபிக்கும் போது ஒவ்வொரு வலயத்தில் இருக்கின்ற ஒவ்வொரு பாடசாலையில் இருக்கின்ற ஆசிரியர் எண்ணிக்கையை முதலில் எண்ணி கணக்கு எடுக்குமாறு கருத்தை நான் முன்வைத்தேன்.

அதிகஷ்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை காட்டி வெற்றிடங்களுக்கு தொழிலை எடுத்துவிட்டு பின்னர் அரசியல் செலவாக்கினால் மாற்றம் செல்லும் விடையம் இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது. இது நிறுத்தப்படவேண்டிய விடையம்.

இந்த பிரதேசங்கள் கல்வியாக இருக்கலாம், அபிவிருத்தியாக இருக்கலாம், அனைத்திலும் நாங்கள் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றோம். எனவே கல்வி என்பது முக்கியமான அடிப்படை தேவையான விடையம். அது எந்த மதமாக எந்த இனமாக இருந்தாலும் அந்தந்த சமூகத்திற்கு கிடைக்கப்படவேண்டும்

அம்பாறை மாவட்டத்தை பொறுத்த மட்டில் தமிழர்களாக இருக்கின்ற நாங்கள் குறைந்த நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எம்மை நசுக்கி ஆழுகின்ற அரசியல் தலைவர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களை விட, சகோதர முஸ்லீம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தமிழர்களுடைய எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கின்ற செயற்பாடுகளிலே இருந்து கொண்டிருக்கின்றார்.

அவரின் செயற்பாட்டின் மூலம் இந்த இனங்களுக்கிடையே இருக்கின்ற ஒற்றுமை இல்லாமல் போய்விடும் நிலமை அதிகமாகவுள்ளது.

நான் ஏனைய சமூகங்களை இணைத்து பயணிக்கின்ற அரசியல்வாதியாக இருந்திருக்கின்றேன். அவர் இன்று கூட ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழர்கள் இரட்டைவேடம் போடுவதாக நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் இரட்டை வேடம் போட்டவர்கள் அல்ல. ஒரு சமூகத்தை அழிக்கின்ற பணிகளை முன்னெடுத் தவர்கள் அல்ல. அவ்வாறு முன்னெடுக்கின்ற ஒரு அரசியல்வாதி கல்முனை பிராந்தியத்தில் உள்ள நாடாளுமன்ற உறப்பினர் ஹரீஸ்.

இந்த நாட்டிலே தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் செயற்பட்டுவரும் ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு தான். அந்த தமிழ் பேசும் என்பது தமிழர்களையும் முஸ்லீம்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு இல்லை. இனம், மதம், என்ற அடிப்படையில் செயற்படுகின்ற அரசியல்வாதிகளாகவே அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய செயற்பாடு எதிர்காலத்தில் இந்த இரண்டு இனங்களையும் பிரிக்கின்ற அல்லது அழிக்கின்ற செயற்பாடாக இருக்கும்.

சமூகத்தை பிரிக்கின்ற நோக்கத்தோடு இந்த அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். நாங்கள் அவ்வாறு இல்லை. ஒரே சிந்தனை ஒரே கொள்கை ஒரே கோட்பாடு. நாங்கள் வருகின்ற அரசாங்கத்துக்கு எல்லாம் கையை உயர்த்திவிட்டு காலில் விழுபவர்கள் அல்ல. நாங்கள் துணிகரத்தோடு உண்மையை நியாயத்தை அநீதியை தட்டிக்கேட்கின்ற அரசியல்வாதிகளாக செயற்படுகின்றோமே தவிர! நாங்கள் எந்த சலுகைகளுக்கும் துணையாக இருந்து செயற்படுபவர்கள் அல்ல என்பதை ஹரீஸ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொல்லி வைக்கின்றேன்.

கல்முனை வடக்கு பிரதேசம் நிர்வாக ரீதியாக இயங்குகின்றது அதன் நிர்வாக நடைமுறைகளை முடக்குகின்றார்கள். அதற்கு அரசாங்கத்தில் இருக்கின்ற சில அதிகாரிகள் துணையாக இருக்கின்றனர்.

எனவே இவ்வாறான அரசியல்வாதிகளை முஸ்லீம் சமூகம் இல்லாமல் செய்யவேண்டும். தமிழ் சமூகத்தையும், முஸ்லீம் சமூகத்தையும், சிங்கள மக்களையும் இணைக்கின்ற அரசியல்வாதிகளை நாங்கள் உருவாக்கவேண்டும். இதன் மூலம் தான் இந்த மாவட்டம் மாத்திரமல்ல மாகாணம் மாத்திரமல்ல இந்த நாடும் முன்னேறும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews