ரணில் விக்கிரமசிங்கவினதும் ராஜபக்ஸ குடும்பத்தினதும், நலன்களுக்காக லட்சோ லட்சம் மக்களினுடைய நின்மதியையும் வாழ்வையும் அரசு சீரழிக்கின்றது. கஜேந்திரன் குற்றச்சாட்டு….!

ரணில் விக்கிரமசிங்கவினதும் ராஜபக்ஸ குடும்பத்தினதும், நலன்களுக்காக லட்சோ லட்சம் மக்களினுடைய நின்மதியையும் வாழ்வையும் அரசு சீரழிக்கின்றது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி பாராளிமன்ற உறுப்பினர் செல்வராச கஜேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.

இன்று காலை வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் மாவீரர் துயிலுமில்லம் சிரமதானப்பணியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்டாவது,

இன்று ரணில் அரசாங்கம் தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு முழு அளவிலான முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி தென்னிலங்கையிலே போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை அச்சுறுத்துகின்ற, கைது செய்கின்ற செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ரணில் அரசாங்கம் இந்த மக்களினுடைய ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அஞ்சுகிறது.

ஏன் என்றால் ஏற்கனவே சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச தரப்பு நாட்டை கொள்ளைடிக்கிறார்கள் என்ற காரணத்தால் அவர்களை பதவியிலிருந்து விரட்டியடித்திருக்கிறார்கள்.

இந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஏற்கனவே 2015 க்கும் 2019 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மத்திய வங்கியில் பெருந்தொகையான ஊழலில் ஈடுபட்தாக பிரதான ஒரு குற்றச்சாட்டு அவருக்கு எதிராக இருக்கிறது.

அதன் காரணமாக அவர்கள் 2020 ம் அண்டு இடம் பெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் அவரையும் அவருடைய கட்சியையும் முற்றாக தோற்கடித்து வீட்டிற்க்கு அனுப்பியிருந்தார்கள்.

இந்த வகையிலே ஜனநாயகமற்ற விதத்திலே, மக்களின் விருப்பங்களுக்கு மாறாக, ராஜபக்சக்களது ஆதரவோடு அவர்கள் ஆட்சிப் பீடம் ஏறியிருக்கிறவர்.

இந்த மக்கள் இவர்கள் இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு அவரையும் இந்த படத்திலிருந்து அகற்றுவதற்க்கு மக்கள் வீதியிலிறங்கி போராட முற்படுகின்ற போது

மக்களினுடைய போராட்டத்தினால் தாங்கள் பதவி இழக்க வேண்டி வரும் என்கின்ற ஒரு அச்சம் காரணமாக தடைகளை விதித்துக் கொண்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையிலே இவர்களுக்கு தேர்தலுக்கு செல்வதற்க்கு அச்சம் இல்லை என்றால் உடனடியாக தேர்தலுக்கு சென்று தேர்தலிலே தங்களுடைய பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்.

அதனை விடுத்து மக்கள் நிராகரித்த நிலையிலே ஒரு முறைகேடன விதத்திலே மக்களினுடைய விருப்பங்களுக்கு மாறக வந்து அதிகாரத்தில் இருந்து கொண்டு மக்கள் மீது ஒடுக்கு முறையை பிரயோகிப்பது என்பது வெறுமனே ரணில் விக்கிரமசிங்கவினதும் ராஜபக்ஸ குடும்பத்தினதும், நலன்களுக்காக லட்சோ லட்சம் மக்களினுடைய நின்மதியையும் வாழ்வையும் சீரழிக்கின்ற ஒரு செயற்பாடாக மட்டும் தான் இது அமையும்.

ஆகவே இந்த போக்கை அரசு கைவிட்டு உடனடியாக ஒரு தேர்தலுக்கு செல்வதுதான் உண்மையிலே இந்த நாட்டுக்கு நல்லதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன் என்றார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews