கரையோர பாதுகாப்பு, கண்டல் தாவரங்களின் பங்கு, கரையோர வளங்களை பாதுகாத்தல், விழிப்புணர்வு கருத்தமர்வு.

கரையோர பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் அவற்றில் கண்டல் தாவரங்களின் பங்கு, கரையோர வளங்கள் அழிக்கப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வு கருத்தமர்வு நேற்று 20/09/2022 (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி பூனகரி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு காலநிலை மாற்றம், கரையோர பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம்,  அவற்றில் கண்டல் தாவரங்களின் பங்கு, கரையோர வளங்கள் அழிக்கப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியே குறித்த  விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றது.
பூனகரி பிரதேச சபை மண்டத்தில் 10.00 – 3.00 மணிவரை இடம்பெற்ற குறித கருத்தமர்வில் வனவிரிவாக்கத்துறை உத்தியோகத்தர் N. பிரஷாந்த், கரையோர பாதுகாப்பு துறை உத்தியோகத்தர் J. கேசவன், மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் திரு ஜாட்சன் பிகிறாடோ மற்றும் பணியாளர்கள், மீனவர்கள், மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்கள், பூனகரி பிரதேச சமாச நிர்வாகிகள், கரையோர பிரதேச மக்கள் மற்றும் இளையோர்கள் என 50 இக்கும் அதிகமான நபர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews