யாழ்.வட்டுக்கோட்டை – துணைவி பகுதியில் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு! இளைஞன் கைது, 11 வாள்கள் மீட்பு.. |

யாழ்.வட்டுக்கோட்டை – துணைவி பகுதியில் 22 வயதான இளைஞன் ஒருவன் 11 வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

துணைவி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பல விதமான வடிவங்களில் செய்யப்பட்ட வாள்கள் காணப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனை அடுத்து அங்கு விரைந்த அதிரடி படையினர் ஆலயத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தினார்கள்.

அதன்போது அங்கிருந்து பல வடிவங்களில் செய்யப்பட்ட 11 வாள்களை மீட்டனர். அத்துடன் 22 வயதான இளைஞனையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட வாள்களையும் , கைது செய்யப்பட்ட இளைஞனையும் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த இளைஞனின் தந்தை குறித்த கோயிலின் பூசகர் எனவும், வாள்களுடன் கலையாடி குறி சொல்பவர் எனவும்,

அதற்காக பயன்படுத்தும் வாள்களே அவை என இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews