இலங்கை மக்களின் செலவில் செல்வந்தர்களாக மாறிய ராஜபக்ச குடும்பம்-அமெரிக்க செனட் உறுப்பினர்கள்

அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுகள் தொடர்பான குழுவின் தலைவர் பொப் மேனேன்டேஷ்(Bob Menendez) தலைமையிலான செனட் உறுப்பினர்கள், ராஜபக்ச குடும்ப ஆட்சியின் கீழ் காணப்பட்ட பலவீனமான நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கைகள் சம்பந்தமான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு விரிவான சர்வதேச அணுகுமுறையை கோரி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

பொப் மேனேன்டேஷூடன் சென்ட் உறுப்பினர்களான டிக் டேர்பின் (Dick Durbin), பெட்றிக் லீஹி (Patrick Leahy), கொரி புக்கர் (Cory Booker) ஆகியோர் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

இலங்கை மக்களை கஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கும் அழிவான அரசியல் மற்றும் பொருளாதார வியாகுல நிலைமை குறித்து கவனம் செலுத்தும் எமது யோசனையை முன்வைக்க எனது சகாக்கள் இணைத்துக்கொள்ள கிடைத்தமை தொடர்பில் பொறுமைப்படுகிறேன்.

சிவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது சர்வதேச சமூகம் வலுவான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதுடன் இலங்கையின் போர் குற்றங்கள் சம்பந்தமான பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மதித்தல் ஆகியன முன்னுரிமையான விடயங்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம், எமது பங்காளிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானகரமான மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கும் முயற்சிகளை பாராட்டுகிறோம்.

இலங்கை மற்றும் விரிவான பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்ல எனது சகாக்களுடன் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து எனது அர்ப்பணிப்பை உறுதிப்படுகிறேன் என பொப் மேனேன்டேஷ்(Bob Menendez) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட் உறுப்பினர் பொப் மேனேன்டேஷ்(Bob Menendez) மேலும் தெரிவிக்கையில், பல தசாப்த மோதல்கள், தவறான அரசியல் பயன்பாடு, கவனத்தில் கொள்ளப்படாத சமவுரிமையின்மைகளின் பின்னர், இலங்கை மக்கள் சிறந்த ஒன்றை எதிர்பார்க்கின்றனர் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.

நீண்டகாலமாக கவனத்தில் கொள்ளப்படாத சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக அமெரிக்க செனட் சபை அமைதியான ஜனநாயகத்திற்கான முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை பெட்றீக் லீஹி ((Patrick Leahy) தெரிவித்துள்ளதாவது, ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கை மக்களின் செலவில் செல்வந்தர்களாக மாறியுள்ளனர்.

அவர்கள் தமது எதிரணியினரை பலத்தை பயன்படுத்தி, அமைதிப்படுத்தி, இன முரண்களை தூண்டி, நாட்டை பொருளாதார ரீதியாக சீர்குலைக்க இடமளித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் தனிப்பட்ட அரசியல் நோக்கத்திற்காக அரச வளங்களையும் குறைந்த வெளிப்படைத்தன்மையையும் ஒதுக்கிக்கொண்டது.

அவரது அரசாங்கம் தவறான கமத்தொழில் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. பொருளாதார ரீதியாக வெற்றி பெறாத மிகப் பெரிய அபிவிருத்தி திட்டங்களுக்காக சீனாவிடம் இருந்து பல பில்லியன் பெற்றது.

சிவில் போர் மற்றும் அரசின் தவறான முகாமைத்துவம் மற்றும் துஷ்பிரயோகங்களின் பின்னர், இலங்கைக்கு இன ரீதியான பொறுமை, நியாயமான பொருளாதார அபிவிருத்தி, மனித உரிமை மற்றும் நீதிக்கான அர்ப்பணிப்பு கொண்ட அரசாங்கம் அவசியம். அது குறித்து அமெரிக்காவும் கவனம் செலுத்த வேண்டும் என பெட்றீக் லீஹி தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமது நாட்டை கஷ்டத்திற்கு உள்ளாகி, மோசமான பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது அவசியம் என்ற வலுவான செய்திகளை இலங்கை மக்கள் வழங்கியுள்ளதாக கொரி புக்கர் (Cory Booker)தெரிவித்துள்ளார்.

நான் இலங்கை மக்களுடன் இருக்கின்றேன்.அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவர்களின் அமைதியான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குகிறேன்.

மேலும் இலங்கை மக்கள் முன்நோக்கி செல்வதற்கு உதவும் வகையில் சிவில் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச சமூகம் தொடர்ந்தும் உந்துதலை கொடுக்க வேண்டும் எனவும் கொரி புக்கர் (Cory Booker)கூறியுள்ளார்.

இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புகளை பாராட்டும் அதேவேளை செனட் உறுப்பினர்களின் இந்த யோசனையின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தனது போர் குற்ற பொறுப்புக்கூறல் யோசனையை நீடிக்குமாறும் கோரிக்கையும் விடுத்துள்ளது.

அமைதியான எதிர்ப்பை வெளியிட இலங்கையர்களுக்கு இருக்கும் உரிமையை பாதுகாக்குமாறு இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

நெருக்கடியை தீர்க்கும் முயற்சிகளின் போது எதிர்க்கட்சிகள் மற்றும் சிறுபான்மை குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்துவதாகவும் யோசனையில் கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin