யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளி, எமது நிலம் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டதை நீக்கு,

வடக்கு கிழக்கில் மனித உரிமை காவலர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, அரசு மனித உரிமை அனைவருக்கும் சொந்தமானது என்ற பதாகைகளை தாங்கியவாறு காணப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews