யாழ்.சுதுமலை – குருநகர் பகுதிகளில் போதைப் பொருள் மாபியா கும்பலை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது.. |

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவர் உட்பட 3 பேர் கொண்ட போதைப் பொருள் மாபியா கும்பல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றது.

நேற்று காலை மானிப்பாய் சுதுமலை பகுதியில் வைத்து யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 64 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் இன்று நடாத்திய விசேட சுற்றி வளைப்பின் போதே குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சித்தப்பா என அழைக்கப்படும் நபர் ஒருவரும் வத்தளை பகுதியை சேர்ந்த ஒருவர் குருநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருமே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளர்.

கைது செய்யப்பட்ட கும்பல் நீதிமன்றத்தில்முற்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews