ஆளுநரின் பணிப்புரையில் பொதுமக்களின்   தேவைகளுக்குப் பதிலளிக்கும் செயற்திட்டம்.. செயலாளர் வகீசன் தெரிவிப்பு.

வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது அவசரத் தேவைகளை அரசாங்கத்திடம் இருந்தும் அதிகாரிகளிடமிருந்து பதில்களை உதவிகளை விரைவாகப் பெறுவதற்கான பெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் பி.வாகீசன் தெரிவித்தார்.
பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கான அவர்களின் அடையாளத்துடனான குரல்கள் ஆளுநரின் செயலகத்தாற் கேட்டறியப்படும்.
மன்னார், வவுனியா, மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள், அனைத்து கிராம சேவகர்களுக்கும் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் இவ்விடயம் தொடர்பாகத் தெரிவித்தல் வேண்டும்.
முறைப்பாட்டாளர் ஆளுநர் செயலகத்துக்கு குரல் பதிவு மற்றும் மின்னஞ்சல் ஊடாக தகவல்களை பெறுவதற்கு ஆளுநர் செயலாளருடாக வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
ஆளுநர் செயலகம், வட மாகாணம், பழைய  பூங்கா சுண்டுக்குளி யாழ்ப்பாணம் ஆகிய முகவரிக்கு ஒவ்வொரு பிரதேச செயலகத்தினாலும் தபால் மூலம் அனுப்பப்படும் கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். அவசரத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் திட்டமிடப்பட்ட காலம் 2022ம் ஆண்டு புரட்டாதி 9 முதல் 29 வரை 3 வாரங்களாக அமையும்.  பொது மக்களிடமிருந்து பெறப்படும் தேவைகள் தொடர்பான சமர்ப்பிப்புக்கள் ஆளுநர் செயலகத்திற் செயற்;படுத்தப்பட்டு நவம்பர் நடுப்பகுதி அல்லது அதற்கு முன்னராகவோ பதிலளிக்கப்படும்.
தேவை ஏற்படின் வடமாகாணசபை அதிகாரிகள் பொதுமக்களைச் சந்திப்பார்கள் உள்ளுராட்சித் திணைக்களம் வட்டார மட்டத்திலான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை
அந்தந்த வட்டாரங்களிலுள்ள பொதுமக்களுக்கு இம் முயற்சியைப் பற்றி மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களின் சமர்ப்பிப்புகளைச் சேகரிக்கும் போது பெறப்பட்ட தேவைகளின் உண்மைத்தன்மையைக் குறுக்குப் பரிசீலனை செய்யவும்
ஈடுபடுத்தும் வடமாகாண சபையின் இம் மாவட்டங்களிலிருந்து பின்வரும் அதிகாரிகள் இம்முயற்சிக்குக் கைகொடுப்பார்கள்.
பொறியியலாளர் த.ராஜகோபு (தொடர்புக்கு 0773172093) மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், வவுனியா.
பொறியியலாளர் ந.சுதாகரன் (தொடர்புக்கு 0777235566) மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், முல்லைத்தீவு.
திரு. றொஹான் (தொடர்புக்கு 0718613399) மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மன்னார்.
பிரதேச செயலாளர்கள் தமது பிரதேச செயலகப் பகுதிகளில் மேற்கூறியவற்றைப் பரந்தளவில் விளம்பரப்படுத்தலை ஊக்குவித்தல் வேண்டும்.
இவ்விடயம் சம்பந்தமாக ஏதேனும் விபரம் தேவையாயின் தயவு செய்து திருமதி லாகினி நிருபராஜ், உதவிச் செயலாளர், வடமாகாண ஆளுநர் செயலகம் 021 222 0660 என்ற தொலைபேசி
இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews