கிளி/பிரமந்தனாறு மகாவித்தியாலயத்திற்கு மேசைப் பந்து விளையாட்டுக்கான உபகரணங்கள் அன்பளிப்பு…….!

இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத்தொண்டர்சபையின் ஒழுங்கமைப்பில் பிரமந்தனாறு மகாவித்தியாலய அணியை மேலும்  வினைதிறன்மிக்க அணியாக மாற்றும் நோக்குடன்  மூன்று இலட்சம் பெறுமதியான மேசைப்பந்து விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு(07.09.2022) அண்மையில் இடம் றெ்றுள்ளது.

ஜக்கிய அமெரிகாவில் வசிக்கும் சமூகசெயற்பாட்டாளர் மதன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மேசைப்பந்து சங்கத்தின் செயலாளரும் பயிற்றுவிப்பாளருமான திரு.ஜெகநாதன் அவர்களால் குறித்த மேசைப்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன்.

 சிவகுரு ஆதீன குருமுதல்வரும் இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஆலோசகருமாகிய தவத்திரு வேலன் சுவாமிகளின் திருமுன்னிலையில் பிரமந்தனாறு மகாவித்தியாலய அதிபர் க.தெய்வராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மங்கல விளக்கினை தவத்திருவேலன் சுவாமிகள், வடக்கு வலயகல்விப்பணிப்பாளர் திரு.சு.சிவனருள்ராஜா, இலங்கை முதல்உதவிச்சங்க இந்து சமயத்தொண்டர் சபை தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ், மகளீர் பொறுப்பாசிரியர் திருமதி.கேதீஸ்வரி, தேசியகண்காணிப்பாளர் வை.ஜெகதாஸ், மற்றும் மேசைப்பந்து சங்கத்தின் செயலாளர் திரு.ஜெகனாதன்(மோகன்) ,வடமாகாண விளையாட்டு உத்தியோகத்தர்கள் மாணவர்கள் ஆகியோர் ஏற்றினர்.

விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்து வீதியிலிருந்து அழைத்துவரப்பட்டு   சைவசமய மரபுகளுக்கமைய தவத்திரு வேலன் சுவாமிகள் அவர்களிடம் பூரணகும்பம் கொடுத்த வரவேற்கபப்பட்டார்.

காலை  7.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில்  ஆசியுரையினை  தவத்திரு வேவன் சுவாமிகள் ஆற்றியதை தொடர்ந்து கருத்துரையை பிரதம வழருந்தினரான கல்விப்பணிப்பாளர் திரு.சு.சிவனருள்ராஜா  உட்பட பலரும் நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து காலை பத்து மணிக்கு இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத்தொண்டர்கள்,மாணவர்களின் அணிவகுப்பு மரியாதைகளும் இடம் பெற்றது.

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews