பாட்டாளிபுரத்தில் சிறுவர் துஸ்பிரயோகம். மாணவர் இடைவிலகல்  தொடர்பான விழிப்பணர்வு செயலமர்வு…..!

திருகோமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் மற்றும் நல்லூர் கிராமசேவையாளர் பிரிவுகளில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும்  பாடசாலையில் இருந்து இடைவிலகுகின்றமை பிள்ளைகள்    போன்றவற்றுக்கு தீர்வு காணும் நோக்கில் மூதூர் பிரதேசசெயலாளர் எம்.பி.எம் முபாரக் தலைமையில் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயக் கேட்போர் கூடத்தில் விசேட செயலமர்வு ஒன்று இன்று 9.00-1.00மணிவரை நடைபெற்றது.
இதில் கல்வித்துறை சார்ந்த ஆறு அரச திணைக்களங்களைச் சேர்ந்த 75 அரச அதிகாரிகள் கலந்து கொண்டு இப்பிரச்சனைகளத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். இதன் போது பிரதேச செயலாளர்.  பிரதேச சபையின் தவிசாளர். வலயக்கல்விப்பணிப்பாளர். சம்பூர் போலீஸ்நிலையப் பொறுப்பதிகாரி. உள்ளடங்கலான அதிகார்களுடன் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்.  பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
இதன்போது பெற்றோர்கள் மாணவர்கள் போன்றோருக்கு விழிப்புணர்வூட்டப்பட்டதுடன் சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விரைந்து சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது

Recommended For You

About the Author: Editor Elukainews