வவுனியாவில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் ஊழியர்களின் விடுதியில் தீப்பரவல் – முற்றாக சேதம்

வவுனியா மன்னார் வீதி 4ம் கட்டை பகுதியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக விடுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

மாவட்டத்தின் பல பகுதிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதியில் நேற்று காலை 10.00 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதனை அவதானித்த மக்கள் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் இரானுவத்தினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த வந்த உரிய தரப்பினரின் முயற்சியினால் விடுதியில் ஏற்பட்ட தீ  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் தீப்பரவல் காரணமாக விடுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் தீ விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் குறித்த விடுதியில் 30 ஊழியர்கள் தங்கியிருப்பதுடன் அவர்கள் விடுமுறையில் சென்றுள்ளமையினால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்றும்  பல உடமைகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Recommended For You

About the Author: admin