வடமாகாணத்தை சேர்ந்த 4 அரச அதிகாரிகள் நிர்வாக சேவையில் சிறப்புத் தேர்ச்சி! வடமாகாணத்திலேயே விரைவில் நியமனம்.. |

வடமாகாணத்தை சேர்ந்த 4 அரச அதிகாரிகள் நிர்வாக சேவை சிறப்புத் தர அதிகாரிகளாக தேர்ச்சி பெற்று வடமாகாணத்தில் நியமனம் பெறவுள்ளனர். 2022ம் ஆண்டு நிர்வாக சேவை சிறப்புத்தரத்திற்காக 6 அதிகாரிகள் வடமாகாணத்திலிருந்து நேர்முக தேர்வில் பங்கெடுத்திருந்தனர்.

தற்போது ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 6 அதிகாரிகளும் தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கனகேஸ்வரன்,  இந்துக் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஷ்வரன், பருத்தித்துறை பிரதேச செயலர் ஆழ்வார்ப்பிள்ளை சிறி, காரைநகர் பிரதேச செயலர் ஜெகு ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இவர்களில் கனகேஸ்வரன் மற்றும் உமா மகேஸ்வரன் ஆகியோருக்கு முக்கிய அமைச்சுக்களில் செயலாளர் பதவிகளும், மற்றைய இரு அதிகாரிகளுக்கு மாகாண பேரவை செயலகத்தில் முக்கிய பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தொிவிக்கின்றன

Recommended For You

About the Author: Editor Elukainews